மருத்துவ படிப்பில் 69% இடஒதுக்கீடு எதிர்த்து வழக்கு: உச்சநீதி மன்றம் தள்ளுபடி

டில்லி:

மிழகத்தில் மருத்துவக் கலந்தாய்வில் 69 சதவிகித இட ஒதுக்கீடு பின்பற்றுவதற்கு எதிராக ‘ஒசி’ பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவை தள்ளுபடி செய்வதாக  உச்சநீதி மன்றம் அறிவித்து உள்ளது.

தமிழகத்தில் தற்போது 2வது கட்ட மருத்துவ கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், மருத்துவ கல்லூரி இட ஒதுக்கீட்டில், தமிழக அரசின் இடஒதுக்கீடு சட்டப்படி  69 சதவிகித இடஒதுக்கீடு நடைபெற்று வருகிறது,

இந்த இடஒதுக்கீட்டை 50 சதவிகிதமாக குறைக்க வேண்டும் என இடஒதுக்கீடு இல்லாத (ஓசி) பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் முத்துராமகிருஷ்ணன், சத்தியநாராயணன் சார்பில்  உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அவர்கள் தாக்கல் செய்த மனுவில்,  தமிழகத்தில் 69 சதவிகித இடஒதுக்கீடு முறையை பின் பற்றுவதால் மருத்துவ படிப்பில் சேர தங்களுக்கு சீட் கிடைக்கவில்லை என்றும் அம்மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளனர்.

மேலும், தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற கிளையின் உத்தரவால் கலந்தாய்வு மூலம் சேர்ந்த தனக்கு பாதிப்பு வரக்கூடாது என்று மாணவர் சத்திய நாராயணன் மனு அளித்திருந்தார்.

இந்த வழக்கு இன்று உச்சநீதி மன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்கை விசாரித்த உச்சநீதி மன்றம்,மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

கார்ட்டூன் கேலரி