அகமதாபாத்:

குஜராத் மாநிலத்தில், பிறந்து 6நாளே ஆன பச்சிளம் இரட்டை குழந்தைகளுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இதுவே மிகக்குறைந்த வயதுடைய குழந்தைகள்  என கூறப்படுகிறது. இது  அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

குஜாராத் மாநிலம் மெசானா மாவட்டத்தில்  உள்ள மொலிப்பூர் கிராமத்தைச் சேர்ந்த கர்ப்பி பெண் பெண் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், வட்நகர் சிவில் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தது. அந்த இரண்டு குழந்தைகளுக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

கொரோனா வைரசால் பாதிக்கப்படுவது இதுவே முதன்முறை என அந்த மருத்துவமனை  மருத்துவர் தாக்ஸினி தெரிவித்துள்ளார். இரட்டைக் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர்களது உடல்நலம் சீராக இருப்பதாகவும்  தெரிவித்துள்ளார்.

பிறந்து ஆறே நாள்களில் இரட்டைக் குழந்தைகளுக்கு  கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டதன் மூலம், மாநிலத்தில் மிக இளம் வயதிலேயே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களாக இக்குழந்தைகள் கருதப்படுகின்றன.