திருப்பதி பிரமோற்சவம் 6வது நாள்: ஹனுமந்த வாகனத்தில் மலையப்ப சாமி வீதி உலா

திருமலை:

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா கோலாகலமாக கடந்த சில நாட்களாக  நடைபெற்று வருகிறது. இன்று 6வது நாள் விழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.

இன்றைய விழாவில்  மலையப்ப சுவாமி ஹனுமந்த வாகனத்தில்   வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். லட்சக்கணக்கான பக்தர்கள் மலையப்ப  சுவாமியை  தரிசித்து வருகின்றனர்.

தொடர்ந்து  இன்று மாலை 5 மணியளவில் தங்கத்தேரோட்டம் நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து இரவு யானை வாகனத்தில் சுவாமி  வீதிஉலா நடை பெற உள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலின் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த ஒருவாரமாக விமரிசையாக நடைபெற்று வருகிறது. தினசரி லட்சகணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் பெற்று வருகின்றனர்.

5வது நாளான நேற்று  இரவு கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலாக வந்தார். இதை ஏராளமானோர் கண்டுகளித்தனர்.  இன்று 6வது நாளாக பிரமோற்சவம் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

சுவாமி திருவீதி உலாவின் போது,   ஜீயர்கள் நாலாயிர திவ்ய பிரபந்தம் பாடியபடியும்,  பக்தர்கள் பஜனை பாடல்களை பாடியபடி, கோலாட்டம், பரத நாட்டியம் ஆடிக்கொண்டு மாட வீதிகளில் வலம் வந்தனர். மாட வீதிகளில் நடந்த பல்வேறு கலை நிகழ்ச்சிகளை பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கண்டு ரசித்தனர்.

மாட வீதியின் இரு புறத்திலும் திரண்டிருந்த பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என கோஷம் எழுப்பி சுவாமியை தரிசனம் செய்தனர்.

19-ந்தேதி காலை சூரிய பிரபை வாகன வீதிஉலா, இரவு சந்திர பிரபை வாகன வீதிஉலா,

20-ந்தேதி காலை 7 மணியில் இருந்து 11 மணிவரை தேரோட்டம், இரவு குதிரை வாகன வீதிஉலா,

21-ந்தேதி காலை 7 மணியில் இருந்து 9 மணிவரை சக்கர ஸ்நானம் (சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி), இரவு 7 மணியில் இருந்து 9 மணிவரை கொடியிறக்கத்தோடு பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: 6nd day of Tirupathi Brahmotsavam celebration, Malaiyappa Swami Bhavani in Hanumantha vahana, திருப்பதி பிரமோற்சவம் 6வது நாள்: ஹனுமந்த வாகனத்தில் மலையப்ப சாமி வீதி உலா
-=-