6ந்தேதி தீபாவளி: புதுச்சேரியிலும் 5ந்தேதி அரசு விடுமுறை

புதுச்சேரி:

ரும் 6ந்தேதி செவ்வாய்க்கிழமை தீபாவளி பண்டிகை வருவதையொட்டி, 5ந்தேதி திங்கட்கிழமை அரசு விடுமுறை விடப்படுவதாக புதுச்சேரி மாநில அரசு அறிவித்து உள்ளது.

ஏற்கனவே தமிழகத்தில் 5ந்தேதி விடுமுறை விடப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ள நிலை யில், தற்போது புதுச்சேரி அரசும் 5ந்தேதி விடுமுறை விடப்படுவதாக அறிவித்து உள்ளது.

தீபாவளி பண்டிகையை கொண்டாட மாநிலத்தில் வசித்து வரும் வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம்.  இதன் காரணமாக   சொந்த ஊருக்கு செல்வோர் கூடுதலாக விடுமுறை எடுத்து கொள்ளும் வகையில் வருகிற 5-ந் தேதியும் விடுமுறை நாளாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன் காரணமாக 4 நாட்கள் தொடர் விடுமுறை கிடைத்த மகிழ்ச்சியில் அரசு ஊழியர்கள் சந்தோஷத்தில் உள்ளனர்.

புதுவையிலும் வருகிற 5-ந் தேதி விடுமுறை தினமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதைத்தொடர்ந்து, இதுகுறித்து,  மத்திய உள்துறையிடம் அனுமதி கேட்டு கடிதம் அனுப்பி உள்ளதாகவும், அனுமதி கிடைத்தவுடன் விடுமுறை அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் புதுவை அரசின் சார்பு செயலர் வெர்பினா ஜெயராஜ் 5ந்தேதி விடுமுறை குறித்து அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

அதில், புதுவை, காரைக்கால் பிராந்தியங்களில் நவம்பர் 5-ந் தேதி விடுமுறை தினமாக அறிவிக்க புதுவை கவர்னர் கிரண்பேடி அறிவுறுத்தினார். இதற்கு பதிலாக டிசம்பர் 1-ந் தேதி (சனிக்கிழமை) வேலை நாளாக இருக்கும். இது, புதுவை, காரைக்கால் பிராந்தியங்களுக்கு மட்டுமே பொருந்தும் என தெரிவித்து உள்ளார்.

புதுவை அரசு வருகிற 5-ந் தேதி விடுமுறை அறிவித்த நிலையில் புதுவையில் பணியாற்றும் வெளி மாநில, மாவட்ட அரசு ஊழியர்கள், பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.