நிலநடுக்கம்: அலாஸ்கா மாநிலத்தில் அவசரநிலை பிரகடனம்

அலாஸ்கா:

மெரிக்காவில் நில நடுக்கம் தாக்கிய பகுதிகளில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. நிலநடுக்கம்  காரணமாக விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை திரும்பப்பட்டு உள்ளது.

அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7 ஆக பதிவானது.  அலாஸ்கா மாநிலத்தில் உள்ள அன்கரேஜ் நகரின் அருகே இந்த சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக மாநிலத்தில் பல வீடுகள், கட்டிடங்கள், சாலைகள் பாதிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலநடுக்கம் கடலுக்கு அடியில்  40.9km ஆழம் கொண்ட ஆழத்தில் ஏற்பட்டதாகவும், அதன் காரணமாகவே சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அலாஸ்கா மாநிலத்தில் சுமார் 3லட்சம் பேர் வாழ்கின்றனர். இதையடுத்து  அலாஸ்கா மாநிலத்தில் அவசரநிலையை பிரகடனம் செய்து அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

தேசிய பேரிடர் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் துரிதமாக நடைபெறவும் இதற்கான செலவினங்களை தங்குதடையின்றி ஒதுக்கீடு செய்யவும் இந்த உத்தரவு துணைபுரியும் என்பது குறிப்பிடத்தக்கது.