சென்னை:
டாஸ்மாக் தொடர்பான வழக்கில், உச்சநீதி மன்றம் பச்சைக்கொடி காட்டியதைத் தொடர்ந்து, தமிழகத்தில் நாளை டாஸ்மாக் கடைகள்  திறக்கப்படுகின்றன.
உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பை தொடர்ந்து, தமிழகத்தில் கட்டுப்ப்படுத்தப்பட்ட பகுதிகள், சிவப்பு மண்டலங்கள்  தவிர்த்து மற்ற இடங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்க தமிழக அரசு அனுமதி  வழங்கி உள்ளது.

அதன்படி நாளை திறக்கப்படும் டாஸ்மாக் கடைகளில் மதுபானம் வாங்க, குடி மகன்களுக்கு  ஏழு வண்ணங்களில் டோக்கன் விநியோகம்  செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது.
ஒவ்வொரு கிழமையும், ஒவ்வொரு வண்ணத்திலான டோக்கன் வழங்கப்படும் என்றும், 7 நாட்களுக்கு 7 வண்ணத்தில் டோக்கன் வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
டோக்கனில் குறிப்பிட்டுள்ள கிழமை மற்றும்  நேரத்தில் மட்டுமே மதுபானம் வாங்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
உச்சநீதிமன்ற விதிகளை உரிய வகையில் நடைமுறைப்படுத்த  அனைத்து மாவட்ட எஸ்.பி, காவல் ஆணையர்களுக்கு டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும், 550 பேர் மட்டுமே வரிசையில் நிற்கவேண்டும் மற்றவர்களுக்கு டோக்கன் வழங்க வேண்டும்.

டாஸ்மாக் கடைகளை திறப்பதில், உச்சநீதிமன்ற விதிகளை உரியவ கையில் நடைமுறைப் படுத்தப்பட வேண்டும்
இவ்வாறு காவல்துறையினருக்கு  டிஜிபி உத்தரவிட்டு உள்ளார்.