தமிழகத்தில் எங்கெல்லாம் கொரோனா பரிசோதனை கூடங்கள்… விவரம்…

சென்னை:

ந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பரவலை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. மேலும் கொரோனா பரிசோதனை கூடங்களையும் அதிக அளவில் ஏற்படுத்தி வருகின்றன.

தமிழகத்தில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், ஏராளமானோர் தனிமைப்படுத்தப் பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

கொரோனா பரிசோதனை செய்ய தமிழகத்தில் சென்னை மற்றும் தேனியில் மட்டுமே பரிசோதனை கூடங்கள் இருந்த நிலையில் தற்போது மேலும் 5 இடங்களில் பரிசோதனை கூடங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. அத்துடன் சில தனியார் பரிசோதனை கூடங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு பரிசோதனைக் கூடங்கள்:

1) ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை, சென்னை 

2) கிஙஸ் இன்ஸ்டிடியூட், கிண்டி, சென்னை

3) சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, சேலம்

4) கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, கோயம்புத்தூர்

5) திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, திருவாரூர்

6) தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, தேனி

7) திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, திருநெல்வேலி