சென்னை:
மிழக கவர்னர் பன்வாரிலால் உதவியாளர் தாமஸ்-க்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால், மருத்துவர்கள் அலோசப்படி 7 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாக ஆளுநர் மாளிகையான ராஜ்பவன் தகவல் வெளியிட்ட உள்ளது.

கிண்டியில்உள்ள ஆளுநர் மாளிகை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் ஆர்.பி.எஃப் காவல்துறையினர் 147 பேருக்குச் சமீபத்தில் கொரோனா தொற்றுப் பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் 84 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து,  அவர்கள் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.
இதையடுத்து,  ஆளுநர் மாளிகையில் பணியாற்றி வரும் எ 38 ஊழியர்களுக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், ஆளுநரின் உதவியாளர் தாமஸ் உள்பட 3 பேருக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. உடனடியாக அவர்கள் பொது சுகாதாரத்துறை மூலம் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டனர்.
ஆளுநர் பன்வாரிலாலுக்கும்  கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆளுநர் மாளிகை மருத்துவர் ஆளுநருக்கு வழக்கமான மருத்துவப் பரிசோதனையை மேற்கொண்டார். அதையடுத்து, அவரக்கு கொரோனா தொற்று உறுதியாகவில்லை என்றும், அவர் பூரண உடல் நலத்துடன் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும்,  மருத்துவர் ஆலோசனையின்படி 7 நாட்கள் அவர் தனிமைப்படுத்திக் கொண்டதாக ஆளுநர் மாளிகை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.