உ.பி. பட்டாசு ஆலையில் பயங்கர தீ விபத்து: 7 பேர் உடல் கருகி பலி!

படொன்:

த்திரபிரதேச மாநிலம் படொன் பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் நேற்று இரவு  ஏற்பட்ட வெடி விபத்தில் 8 பேர் உடல் கருகி பலியாகினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தீபாவளி பண்டிகை இன்னும் சில நாட்களில் வர உள்ள நிலையில், நாடு முழுவதும் பட்டாசு தயாரிப்பு பணி இரவு பகலாக மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் நேற்று இரவு உத்திரபிரதேச மாநிலம் படொன் அருகேயுள்ள ரசல்பூர் கிராமத்தில் இயங்கிவந்த பட்டாசு ஆலையில் திடீரென விபத்து ஏற்பட்டது. இதில் அங்கு வேலை செய்துகொண்டிருந்த 8 பேர் விபத்தில் சிக்கி உடல் கருவி  உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தகவலறிந்த காவல்துறையினர், தீயணைப்பு துறையினர்  உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இந்த விபத்தில் ஆலை கட்டிடம் இடிந்து  முழுவதுமாக சேதமடைந்துள்ளது.  விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கார்ட்டூன் கேலரி