மகாராஷ்டிராவில் அதிகரிக்கும் கொரோனா: 511 காவலர்களுக்கு பாதிப்பு, 7 பேர் ஒரே நாளில் பலி

--

மும்பை: மகாராஷ்டிராவில் மேலும் 511 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

நாட்டிலேயே அதிக கொரோனா பாதிப்புகள் பதிவாகி வரும் மாநிலம் மகாராஷ்டிரா. கொரோனா தொற்றுக்கு எதிரான களத்தில் பணியாற்றும் காவல்துறையினரையும் கொரோனா விடவில்லை.

மாநிலம் முழுவதும் அதிக போலீசார் கொரோனா தொற்று பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். இந் நிலையில், மகாராஷ்டிராவில் 24 மணி நேரத்தில் மேலும் 511 போலீசாருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, காவல்துறையில் மட்டும் கொரோனாவால் ஒட்டு மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,912 ஆக அதிகரித்துள்ளது.  இன்று ஒரே நாளில் 7 காவலர்கள் பலியாகி இருக்கின்றனர்.

இதன் மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 173ஆக உயர்ந்துள்ளது.  இது வரை 13,719 காவலர்கள் கொரோனாவில் இருந்து வீடு திரும்ப, 3,020 காவலர்கள் சிகிச்சையில் உள்ளனர்.