ரியாத்:

சவுதி அரேபிய பட்டத்து இளவரசராக பொறுப்பேற்ற முகமது பின் சல்மான் பல்வேறு சீர்திருத்தங்களை செய்து வருகிறார்.

சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட இருந்த தடையை நீக்கி இளவரசர் முகமது பின் சல்மான் உத்தரவிட்டார். இந்த உத்தரவு ஜூன் 24-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

சட்டம் அமலுக்கு வராத நிலையில் கார் ஓட்டியதற்காக 7 பெண் வக்கீல்கள் சவுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 15-ம் தேதி முதல் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவர்களில் இமன் அல் நப்ஜன், லுரெயின் அல் ஹத்நுல், அசிசா அல்-யூசப் ஆகியோர் முக்கியமானவர்கள்.

மேலும், இந்த 7 பேரும் வெளிநாட்டு அமைப்புகளுடன் தொடர்பு வைத்திருத்தல், நாட்டு பாதுகாப்புக்கு குந்தகம் விளைவித்தல், ஒற்றுமையை பிளவுபடுத்துதல் போன்ற குற்றச்சாட்டுக்கள் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது.