ஆப்கன் தற்கொலைப் படை தாக்குதலில் 7 பேர் பலி!!

காபூல்

ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் திருமண மகால் வெளியே நடந்த தற்கொலை தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டனர்.

ஆப்கானிஸ்தான் நாட்டில் காபூல் நகரில் வெடிகுண்டுகளை கட்டி கொண்டு வந்த தற்கொலை தீவிரவாதி திருமண மகால் ஒன்றிற்குள் நுழைய முயன்றுள்ளார். அவரை பாதுகாப்பு சோதனை பகுதியில் தடுத்து நிறுத்திய போலீசார் அவரிடம் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

இதனால் அந்த நபர் வெடிகுண்டுகளை வெடிக்க செய்துள்ளார். இந்த தாக்குதல் சம்பவத்தில் 7 பேர் பலியாகினர். அவர்களில் பலர் போலீஸ் அதிகாரிகள் என தகவல் தெரிவிக்கின்றது.