Random image

நாமக்கல் அரசு மருத்துவமனையில் ரூ.7லட்சம் மதிப்புள்ள காலாவதியான மருந்துகள்! அதிமுக எம்எல்ஏ பகீர் தகவல்

சேலம்:

நாமக்கல் அரசு மருத்துவமனையில் உள்ள மருந்துகள் பெரும்பாலும் காலாவதியான மருந்துகள், சுமார் 7 லட்சம் அளவிலான காலாவதி மருந்துக்கள் நாமக்கல் மருத்துவமனையில் இருப்பதாக அதிமுக எம்எல்ஏ செம்மலை பகீர் தகவல்களை தெரிவித்து உள்ளார்.

இரு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காலாவதியான மருந்துகள்தான் நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறதா என்றும் கேள்வி எழுந்துள்ளது.

தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்களின் குழுவினர் மாவட்டந்தோறும் பல்வேறு அரசு துறை அதிகாரிகளுடன் ஆலோசனையும், ஆய்வும் நடத்தி வருகின்றனர்.

இந்த குழுவின் தலைவராக முன்னாள் அமைச்சரான செம்மலை எம்எல்ஏ இருந்து வருகிறார். இந்த குழுவினர் நேற்றுநாமக்கல் மாவட்டத்தில் ஆய்வு செய்தனர்.  நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், பல்வேறு அரசுத்துறை அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடத்தினர். இதில் கலெக்டர் ஆசியாமரியம் பங்கேற்றார்.

யில் ரூ.7லட்சம் மதிப்புள்ள! அதிமுக எம்எல்ஏ பகீர் தகவல்

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த செம்மலை,  நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு, தமிழ்நாடு மருத்துவ கழகம் அனுப்பிய மருந்துகளில் ரூ. 7 லட்சம் மதிப்பிலான காலாவதியான மருந்துகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

வருங்காலத்தில் இதுபோன்ற தவறுகள் நடக்கக்கூடாது என்றும்,  காலாவதி தேதியை பார்த்து, அதற்கு முன்னதாகவே, அருகில் உள்ள மாவட்டங்களுக்கு மருந்துகளை அனுப்பி வைக்க வேண்டும் என குழுவின் சார்பில் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதிமுகவை சேர்ந்த எம்எல்ஏவான செம்மலையின் இந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில்தான் அரசு மருத்துவர்களின் கவனக்குறைவால் நோயாளிக்கு எய்ட்ஸ் ரத்தம் ஏற்பட்டு பிரச்சினைகள் நடைபெறு வரும் நிலையில், தற்போது காலாவதி மருந்துக்கள் இருப்பது குறித்து தெரிய வந்துள்ளது.

இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காலாவதியான மருந்துக்கள் எவ்வாறு கொள்முதல் செய்யப்பட்டது.. இதை யார் கொள்முதல் செய்தார்கள்… இதறகு யார் பொறுப்பு என்று சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பப்பட்டு உள்ளது.

காலாவதியான மருந்துகள்தான் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறதா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.