சென்னை: தமிழகத்தில் மேலும் 7 சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சென்னையில் இருந்து மதுரை, நெல்லை, செங்கோட்டை, கொல்லம், ஆலப்புழா, ராமேஸ்வரத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

எர்ணாகுளம்- காரைக்கால் இடையேயும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில்களுக்கான முன்பதிவு நாளை துவங்கும் என்று  தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த ரயில்கள் வரும் 2ம் தேதி முதல் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.