கனமழை: மும்பையில் அடுக்குமாடி கட்டடம் சரிந்துவிழுந்து 7 பேர் பலி!

மும்பை:

ந்த ஆண்டு வட மாநிலங்களில் வரலாறு காணாத அளவுக்கு கனமழை பெய்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

கடந்த சில நாட்களாக மும்பை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மும்பையில் உள்ள பிந்தி பஜார் பகுதியில் இன்று காலை மூன்று மாடிக் கட்டடம் ஒன்று  இடிந்து விழுந்து தரைமட்டமானது.

இந்த திடீர் விபத்தில், இடிபாடுகளில் சிக்கி 7 பேர் பலியாகினர். மேலும் 8 பேர் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த கட்டித்தினுள் மேலும் 20 பேர் சிக்கி இருப்பதாகவும், அவர்களை மீட்பு குழுவினர் மீட்க போராடி வருவதாகவும் கூறப்படுகிறது.

இதன் காரணமாக பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று கூறப்படுகிறது.