சீன பள்ளியில் குண்டுவெடித்து 7 பேர் பலி

பீய்ஜிங்:

சீனாவில் மழலையர் பள்ளியில் இன்று குண்டு வெடித்ததில் 7 பேர் பலியாயினர்.

சீனாவில் ஜியாங்ஸூ மாகாணத்தில் பிங்க்ஸியான் என்ற இடத்தில் மழலையர் பள்ளி உள்ளது. இங்கு திடீரென குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. இதில் 7 பேர் உடல் சிதறி பலியாயினர்.

இந்த சம்பவத்தில் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் பலர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். போலீசார் நடத்திய விசாரணையில் சமையல் அறையில் காஸ் சிலிண்டர் வெடித்ததில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தில் 59 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக சீனா போலீசார் தெரிவித்துள்ளனர். குண்டுவெடிப்பு நடந்த பள்ளியை சுற்றி போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மழலையர் பள்ளியில் குண்டு வெடித்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது