Random image

எழுவர் விடுதலை… அமைச்சரவை தீர்மானத்தை நிராகரிக்க ஆளுநருக்கு உரிமை இல்லை!: அமைச்சர் ஜெயக்குமார்

ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகள் எழுவரை விடுதலை செய்யவேண்டும் என்ற அமைச்சரவை தீர்மானத்தை அமைச்சரவை தீர்மானத்தை நிராகரிக்க ஆளுநருக்கு உரிமை இல்லை என்று  அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலைக் குற்றவாளிகள் எழுவரை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் உண்டு என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த நிலையில் இன்று அமைச்சரவை கூடி, எழுவரை விடுதலை செய்வது என்று தீர்மானம் நிறைவேற்றியது.

கூட்டம் முடிந்தபிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் இது குறித்து தெரிவித்ததாவது:

“எழுவரை விடுவிக்க வேண்டு என்ற தமிழக அமைச்சரவையின் தீர்மானம் முக்கியத்துவம் கருதி உடனடியாக ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

. இது முழுக்க மாநில அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டது. இதன்படி மாநில அமைச்சரவை எடுத்திருக்கும் இந்த முடிவை ஆளுநர் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். இதை நிராகரிக்க ஆளுநருக்கு அதிகாரமில்லை. மாநில அமைச்சரவையின் முடிவை செயல்படுத்தும் இடத்தில்தான் ஆளுநர் இருக்கிறார்.

மேற்கொண்டு இந்த விவகாரத்தில் ஆளுநர் மத்திய அரசின் ஆலோசனையை கேட்க தேவையில்லை. சட்டப்பிரிவு 161 மாநில அரசுக்குள்ள அதிகாரம் குறித்து தெளிவாக கூறியிருக்கிறது” என்று ஜெயக்குமார் தெரிவித்தார்.