பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்: 7 வயது சிறுமி, ராணுவ வீரர் பலி!

ஸ்ரீநகர் :

ந்திய  எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய அத்துமீறிய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் மற்றும் 9 வயது சிறுமியும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

காஷ்மீர் எல்லைக்கோட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில்,  காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாலாகோட், மாஞ்சாகோட் மற்றும் பிம்பெர் காலி செக்டாரில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய அத்துமீறிய தாக்குதலில் 7 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் ராணுவ வீரர் ஒருவரும் வீர மரணம் அடைந்தனர்.

பாகிஸ்தான் ராணுவத்தினர் எல்லைக்கோடு அருகில் உள்ள கிராமவாசிகளை அடிக்கடி தாக்கி வருகின்றனர். இந்நிலையில் தற்போது பாகிஸ்தான் ராணுவத்தினரின் மனிதாபிமானமற்ற தாக்குதலில் பலியான சிறுமி   பூஞ்ச் மாவட்டம் பாலகோட்டை சேர்ந்த சைதா என்று தெரிய வந்துள்ளது.

அதேபோல ராஜோரி செக்டாரில் நடைபெற்ற தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் நாய்க் முத்தாசிர் அகமது உயிரிழந்தார்.

இதனிடையே இந்திய ராணுவம் நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 பாகிஸ்தான்  வீரர்கள் உயிரிழந்து விட்டனர் என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

இந்திய ராணுவ தாக்குதலில் சிக்கிய பாகிஸ்தான் ராணுவ வாகனம் நீலம் ஆற்றில் விழுந்து விட்டது என வும், அதில் ஒரு  ராணுவ வீரரின் சடலம் மீட்கப்பட்டதாகவும், மூன்று ராணுவ வீரரின் சடலத்தை தேடி வருவதாகவும் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

You may have missed