7 வயது சிறுமி காயங்களுடன் மரணம் : பெருந்துறையில் பதட்டம்

பெருந்துறை

பெருந்துறை அருகே 7 வயது சிறுமி காயங்களுடன் இறந்து கிடந்தது பெரும் பதட்டத்தை உண்டாக்கி இருக்கிறது.

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் ஒரு பனியன் நிறுவனத்தில் சண்முகநாதன் என்பவர் பணி புரிந்து வந்தார்.   இவர் மனைவி கனகா.  இவர்களின் 7 வயதான மகள் தனிஷ்கா திடீரென காணாமல் போய் உள்ளார்.  ஊரெங்கும் தேடிய போது ஒரு வீட்டின் பின் பகுதியில் உள்ள ஒரு மரத்தடியில் தனிஷ்கா கிடப்பது கண்டறியப் பட்டது.

பதறிப்போன பெற்றோர் பெருந்துறை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.   அப்போது தனிஷ்கா ஏற்கனவே மரணம் அடைந்த நிலையில் எடுத்து வரப்பட்டது தெரிய வந்தது.   சிறுமியின் உடலில் காயங்கள் இருந்ததால் சந்தேகம் கொண்ட காவல்துறையினர் சடலத்தை கோவை அரசு மருத்துவமனைக்கு  பரிசோதனைக்கு அனுப்பி உள்ளனர்.  இச்சம்பவம் அந்த பகுதியில் கடும் பதட்டத்தை உண்டக்கி இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published.