கொச்சின்: இந்தியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்திற்கு விதிக்கப்பட்ட 7 ஆண்டுகள் தடை முடிவுக்கு வந்துள்ளது.

கேரளாவைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த், 27 டெஸ்ட் போட்டிகள்(87 விக்கெட்டுகள்), 53 ஒருநாள் போட்டிகள்(75 விக்கெட்டுகள்) ஆடி, நல்ல ரெக்கார்ட் வைத்துள்ளார். மேலும் 10 சர்வதேச டி20 போட்டிகளிலும்(7 விக்கெட்டுகள்) ஆடியுள்ளார்.

ஐபிஎல் தொடரில், இவர் சூதாட்டத்தில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில், இவருக்கு வாழ்நாள் தடைவிதிக்கப்பட்டு, பின்னர் அது 7 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது. இவர், 2011ம் ஆண்டு உலகக்கோப்பை வென்ற இந்திய அணியில் இடம்பெற்று, இறுதிப் போட்டியிலும் ஆடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இவருக்கான தடை தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

“என்மீது இனிமேல் எந்தக் குற்றச்சாட்டும் கிடையாது. நான் நேசிக்கும் கிரிக்கெட்டில் இனி நான் பங்கேற்கலாம். அடுத்த 5 முதல் 7 ஆண்டுகள் வரை என்னால் சிறப்பான கிரிக்கெட்டை ஆட முடியும்” என்றுள்ளார் 37 வயதான ஸ்ரீசாந்த்.