சமோலி: உத்தரகண்டில் பனிப்பாறை உடைந்து வெள்ளம் ஏற்பட்ட சம்பவத்தில் இதுவரை 70 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

சமோலி மாவட்டத்தில் நந்தாதேவி பனிப்பாறையின் ஒரு பகுதி உடைந்து, அங்குள்ள தவுளிகங்கா, ரிஷி கங்கா, அலக் நந்தா நதிகளில் கடந்த 7ம் தேதி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.  2 மின் நிலைய கட்டுமானப் பணிகளுக்காக தோண்டப்பட்டிருந்த சுரங்கங்களில் வெள்ள நீர் புகுந்தது.

இந்த சம்பவத்தின்போது அங்கு பணியாற்றி கொண்ட ஏராளமான தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். அப்பகுதிகளில் மீட்புப் பணிகள் இன்னும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந் நிலையில் மீட்புப் பணி நிலவரத்தின் சமீபத்திய தகவல் வெளியாகி உள்ளது. மொத்தம் 70 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மேலும், 29 உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 135 பேர் இன்னும் கண்டறியப்பட வில்லை. தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளதாக மீட்பு படையினர் கூறி உள்ளனர்.