ணு ஆயுதங்கள், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை அழியுங்கள், அதற்கான திட்டங்களையும் கைவிடுங்கள் என்று வடகொரிய அதிபருக்கு 70 நாடுகள் கோரிக்கை வலியுறுத்தி உள்ளன.

அணுஆயுத சோதனைகளை நடத்தி அமெரிக்கா உள்பட உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த வடகொரியா, இடையில் அமெரிக்க அதிபருடன் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 12-ம் தேதி, சிங்கப்பூரில் பேச்சு வார்த்தை நடைபெற்றது.

உலக நாடுகளே பெரிதும் எதிர்பார்த்த அந்த பேச்சு வார்த்தையில் அமெரிக்க அதிபர் டிரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் சந்தித்து பேசினர். அப்போது, கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதங்கள் இல்லாத பகுதியாக மாற்ற வடகொரியா முன்வந்தது. இது தொடர்பாக இரு தரப்பிலும் ஒப்பந்தம் கையெழுத்தானது. அதைத்தொடர்ந்து கடந்த ஓராண்டாக எந்தவித அணுசோதனைகளி லும் ஈடுபடாமல் தவிர்த்து வந்தது. ஆனால், ஒப்பந்தப்படி அணுஆயுதங்களை அழிக்காமல் அமைதி காத்து வந்தது.

வடகொரியாவின் நடவடிக்கைக்கு  ஐ.நா. பாதுகாப்பு கவுன்சின் கண்டனம் தெரிவித்தது. உலக நாடுகளும் தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர்.

இந்த நிலையில் வடகொரியஅதிபர் கிம் ஜாங் கடந்த மாதம் ரஷிய அதிபர் புதினை சந்தித்து பேசினார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. அதையடுத்து, சமீபத்தில் ஏவுகணை சோதிக்க வைத்து, மீண்டும் ஆயுத சோதனையை தொடங்கி உள்ளது வடகொரியா.

இதற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்த நிலையில், இது தற்காப்புக்காக நடத்தப்பட்ட பயிற்சிதான் என வடகொரியா விளக்கம் அளித்துள்ளது. இந்த நிலையில், வடகொரியாவின் இந்த செயல் உலக அமைதிக்கு அச்சுறுத்தலாக இருப்பதால், அணு ஆயுதங்கள் மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் மற்றும் அது தொடர்பான சோதனை திட்டங்களை கைவிட வேண்டும் என்று 70 நாடுகள் வலியுறுத்தி உள்ளன.

இதுதொடர்பாக பிரான்ஸ் நாடு கொண்டு வந்த இந்த வரைவு அறிக்கையில், அமெரிக்கா, தென் கொரியா மற்றும் ஆசிய நாடுகள், லத்தீன் அமெரிக்க நாடுகள், ஐரோப்பிய நாடுகள் என மொத்தம் 70 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன.

ஆனால், வடகொரியாவுக்கு ஆதரவாக சீனாவும் ரஷியாவும் இந்த அறிக்கையில் கையெழுத்திடவில்லை என்று கூறப்படுகிறது.