ராமர் கோவில் கட்ட 70 லாரி கற்கள் கொள்முதல் : விஸ்வ இந்து பரிஷத் அறிவிப்பு

யோத்தி

யோத்தியில்  ராமர் கோவில் கட்ட 70 லாரி கற்கள் வாங்கப்பட்டுள்ளதாக விஸ்வ இந்து பரிஷத் கூறி உள்ளது.

உத்திரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்ட இந்து அமைப்புகள் பாஜக தலைமையில் முயன்றன. அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வரும் 29 ஆம் தேதி இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

உத்திரப் பிர்தேச சட்டப்பேரவை தேர்தலில் பாஜக அபார வெற்றி பெற்று ஆட்சியில் உள்ளது. பாஜக தனது தேர்தல் பிரசாரத்தில் ராமர் கோவில் கட்டித் தருவதாக வாக்குறுதி அலித்திருந்தது. பாஜகவின் மூத்த தலைவரான சுப்ரமணியன் சாமி மத்தியிலும் மாநிலத்திலும் பாஜக ஆட்சி புரிவதால் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட தடை இல்லை என கூறி இருந்தார்.

இந்து அமைப்பான விஸ்வ இந்து பரிஷத், “ராமர் கோவில் விவகரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக வரும் என நம்பிக்கை உள்ளது. அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதில் இருந்து எந்த காரணத்துக்காகவும் நாங்கள் பின் வாங்கப் போவதில்லை.

ராமர் கோவில் கட்ட 70 லாரி கற்கள் வாங்கப்பட்டுள்ளன. அந்த கற்கள் இன்னும் ஓரிரு தினங்களில் அயோத்திக்கு வந்து சேரும். நாங்கள் கோவில் அமைக்கும் பணியை தொடங்க உச்ச நீதிமன்ற தீர்ப்புக்காக காத்திருக்கிறோம்” என அறிக்கை வெளியிட்டுள்ளது.