வெள்ளம் காரணமாக நாடு முழுவதும் 70லட்சம் பேர் பாதிப்பு 993 பேர் பலி: மத்தியஅரசு தகவல்

டில்லி:

டப்பு ஆண்டில் நாடு முழுவதும் மழை வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர் காரணமாக 993 பேர் சிக்கி உயிரிழந்துள்ளதாவும், 70 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடப்பு ஆண்டில் மழை வெள்ளம், இயற்கை பேரிடர் காரணமாக கேரளா, உத்திரப்பிரதேசம், மேற்கு வங்காளம் உள்பட பல மாநிலங்களில் 993 பேர் சிக்கி உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது.

மேலும், நாடு முழுவதும் ஏற்பட்ட வெள்ளத்தில் சுமார் 70 லட்சம் பேர் பாதிக்கப்பட்டதாகவும், அதில் 17 லட்சம் பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

கேரள மாநிலத்தில் நிகழ்ந்த இயற்கை பேரிழவில் சிக்கி 387 பேர் உயிரிழந்துள்ளதாகவும், உத்தரபிதேசத்தில் 204 பேர் உயிரிழந்து இதுப்பதாகவும், மேற்கு வங்காளத்தில் 195 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்து உள்ளது. கர்நாடகாவில் 161 பேரும் அசாமில் 46 பேரும் சிக்கி உயிரிந்துள்ளதாகவும் தெரிவித்து உள்ளது.

இதுபோன்ற இயற்கை பேரழிவுகளை எதிர்கொள்ளும் வகையில், நிவாரண நிதியை செலவிடுவதற்கு பதிலாக ஒவ்வொரு ஆண்டும் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்களில் பேரிடர் தொடர்பாக  தனியாக நிதியை ஒதுக்க வேண்டும் எனவும் மத்திய அரசு  மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

அதேபோல 2017ம் ஆண்டில் ஏற்பட்ட பேரிடரு காரணமாக  நாடு முழுவதம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1200 என்றும், இதில் அதிகபட்சமாக பீகார் மாநிலத்தில் 514 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.