தேர்வான 70% பேர் மீண்டும் மீண்டும் நீட் தேர்வு எழுதியவர்கள்: கல்வியாளர்கள் அதிருப்தி

சென்னை:
மிழகத்தில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் குறித்து வெளியாகியுள்ள தகவல் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவ படிப்பிற்கான நுழைவு தேர்வான நீட் தேர்வினால் தமிழகத்தில் இதுவரை 13 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இருப்பினும் இந்த ஆண்டு நீட் தேர்வில் நாட்டிலேயே அதிக தேர்ச்சி பெற்ற மாணவர்களின் பட்டியலில் தமிழகம் 5 ஆவது இடத்தை பிடித்தது. தமிழகத்தில் நீட் தேர்வை எழுதிய 99,610 மாணவர்களில் 57,215 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்நிலையில் தமிழகத்தில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் 70% பேர் மீண்டும் மீண்டும் தேர்வு எழுதியவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. 12 வகுப்பிற்கு பின் ஓராண்டு, இரண்டாண்டு காத்திருந்து பயிற்சி பெற்று தேர்வு எழுதிய 70 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக தெரிகிறது.
இது பள்ளிகளைவிட பயிற்சி மையங்களுக்கு முக்கியத்துவம் தரும் சூழலை, 70% தேர்ச்சி காட்டுவதாக கல்வியாலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.