70% கட்சிகள் வாக்குச்சீட்டு முறைக்கு ஆதரவு : காங்கிரஸ் தகவல்

டில்லி

வாக்குச் சீட்டு முறைக்கு வாக்கெடுப்பை மாற்ற 70% கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளதாக காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் அபிஷேக் சிங்வி தெரிவித்துள்ளார்.

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல்கள் மற்றும் வரும் 2019ஆம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்கு தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது.   இது குறித்து விவாதிக்க நேற்று அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்றை ஆணையம் கூட்டியது.   இந்த கூட்டத்தில் கலந்துக் கொள்ள 7 தேசியக் கட்சிகள் மற்றும் 51 மாநிலக் கட்சிகளுக்கும் அழைப்பி விடுக்கப்பட்டிருந்தது.   இந்த 58 கட்சிகளில்  41 கட்சிகள் கலந்துக் கொண்டன.

இந்த கூட்டத்தில் காங்கிரஸ்  அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் அபிஷேக் சிங்வி, மின்னணு வாக்கு இயந்திரத்தில் சந்தேகம் உள்ளதால் அதற்கு பதிலாக முந்தைய வாக்குச்சீட்டு முறைக்கு மாற வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.  அத்துடன் இந்த கோரிக்கைக்கு 70% கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் கூறினார்.    எதிர்கட்சிகள் இணைந்து வாக்கெடுப்பு முறைகேடுகளை களைய வேண்டும் என ஆணையத்திடம் கேட்டுக் கொண்டன

அத்துடன் காங்கிரஸ் சார்பில் மின்னணு இயந்திரங்களில் 30% இயந்திரங்கள் சோதனைக்குள்ளாக்க வேண்டும் எனவும் கோரிக்கை அளிக்கப்பட்டுள்ளது.    தேர்தலில் வேட்பாளர் செலவு வரம்பை அதிகரிக்க அனைத்துக் கட்சிகளும் கோரிக்கை விடுத்துள்ளன.    அரசியல் வெளிப்படைத்தன்மை தேவை என்பதையும் அதனால் மின்னணு வாக்கு இயந்திர முறையை மாற்ற வேண்டும் எனவும் காங்கிரஸ் சார்பில் கோரிக்கை அளிக்கப்பட்டுள்ளது.