சென்னை:
மிழக தலைநகர் சென்னையில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில், திருவல்லிக்கேணி அருகே உள்ள சென்னை ஐஸ்அவுஸ் பகுதியில் ஒரே தெருவில் 70 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. அந்த தெரு அடைக்கப்பட்டு, உள்ளேயிருந்து யாரும் வெளியே செல்லவோ, வெளியில் இருந்து யாரும் உள்ளே செல்லவோ அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.

தமிழக்ததில் கொரோனா தாக்கம் முதலில் தப்லிகி ஜமாத் மாநாட்டில் கலந்துகொண்டவர்களால் பரவியது கண்டுபிடிக்கப்பட்டது. அவை கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், கோயம்பேடு மார்க்கெட் கொரோனா ஹாட் ஸ்பாட்டாக திகழ்ந்தது தெரிய வந்துள்ளது. சென்னையில் தினசரி 100க்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு உறுதியான நிலையில், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஞாயிற்றுக்கிழமை 203 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில்,  நேற்று  ஒரே நாளில் 266 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது
இதனால், மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பிய நிலையில், பள்ளிகளிலும், திருமண மண்டபடங்களிலும் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் சென்னையில் ஐஸ் ஹவுஸில் உள்ள ஒற்றைத் தெருவில் மட்டும் 70 பேருக்கு கொரோனா பரவி உள்ளது. தன்னார்வலர் ஒருவர் மூலம் பலருக்கும் பரவி உள்ளதாக கூறப்படுகிறது.
அந்த பகுதியைச் சேர்ந்த  தன்னார்வலர் ஒருவர் அந்த பகுதியில் உள்ள காவலர்கள், சாலையோரத்தில் வசிக்கும் மக்கள்,  மாநகராட்சி ஊழியர்களுக்கு கடந்த வாரம் நல்லெண்ணத்துடன் டீ, பிஸ்கட் மற்றும் உணவு விநியோகித்தார். சமூக இடைவெளியை பின்பற்றியதுடன், மாஸ்க் அணிந்த படி தான் உணவு கொடுத்துள்ளார். ஆனால் அவருக்கு கொரோனாதொற்று பரவியிருப்பது கடந்த இரண்டு நாட்களுக்கு முன்புதான்  தெரியவந்தது.
இதையடுத்து அவருடன் தொடர்பில் இருந்த போலீசார், பொதுமக்கள், மாநகராட்சி ஊழியர்கள், மின்வாரிய ஊழியர்கள் என 80க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. இதையடுத்து அவர் வசித்த வந்த வி.ஆர்.பிள்ளை தெருவில் இன்று  மேலும் 6 பேருக்கு கொரோனா பரவியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்த ஒற்றை தெருவில் 70 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே அந்த பகுதியில்உள்ள அம்மா உணவகத்தில் வேலை செய்து வந்த பெண்மணி ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, அந்த உணவுகம் சீல் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.