சத்தீஸ்கர் : முதல் கட்ட தேர்தலில் 70% வாக்குகள் பதிவு

த்தீஸ்கர்

த்தீஸ்கர் மாநிஅ சட்டப்பேரவை முதல் கட்ட தேர்தலில் 70% வாக்குகள் பதிவாகி உள்ளன.

சத்தீஸ்கர் மாநிலத்தில் 90 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இவற்றில் முதல் கட்டமாக நேற்று 18 தொகுதிகளுக்கு வாக்கெடுப்பு நடந்தது. வரும் 20 ஆம் தேதி மீதமுள்ள 72 தொகுதிகளுக்கு வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இந்த வாக்குகள் வரும் டிசம்பர் மாதம் 11 ஆம் தேதி எண்ணப்பட உள்ளன.

நேற்று நடந்த வாக்கெடுப்பில் மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தல் உள்ள 10 தொகுதிகளில் காலை 7 மணிக்கும் மற்ற 8 தொகுதிகளில் காலை 8 மணிக்கும் வாக்கெடுப்பு தொடங்கியது. வாக்கெடுப்பை முன்னிட்டு துணை ராணுவத்தினர், காவல்துறையினர் என சுமார் 1 லட்சம் பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப் பட்டனர்.

இந்த முதல் கட்ட தேர்தலில் 190 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்த தேர்தலில் காங்கிரஸ், பாஜக, திருணாமுல் காங்கிரஸ் என மும்முனை போட்டி உள்ளது. மக்கள் இந்த முதல் கட்ட வாக்குப் பதிவில் ஆர்வமுடன் வாக்களித்துள்ளனர். தேர்தல் ஆணையம் இந்த முதல் கட்ட வாக்குப்பதிவில் 70% வாக்குகள் பதிவாகி உள்ளதாக அறிவித்துள்ளது.