போலி ஆவனம் மூலம் நிலம் அபரிகப்பு: தமிழகஅமைச்சர் மீது 70வயது மூதாட்டி வழக்கு

சென்னை:

மிழக  அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி போலி ஆவனம், அதிகார துஷ்பிரயோகம் செய்து தன் நிலத்தை அபகரித்துள்ளார்  என்று 70 வயது மூதாட்டி ஒருவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி

தமிழக அரசின் இளைஞர் நலன் மேம்பாடு, விளையாட்டுத் துறை அமைச்சராக இருப்பவர் பாலகிருஷ்ணா ரெட்டி. இவர்  கிருஷ்ணகிரி மாவட்டம் கெம்பசந்திரம் கிராமத்தை சேர்ந்தவர் 70 வயது மூதாட்டி அஞ்சனா என்பவருக்கு சொந்தமான 32.87 ஏக்கர் விவசாய நிலத்தை போலி ஆவணங்கள் மூலம்  அபகரிக்க முயற்சி செய்து வருவதாக, மூதாட்டி அஞ்சனா சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இது தொடர்பான சிவில் வழக்குகள் ஓசூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், அமைச்சர் தனது அதிகார பலத்தினால்

விளையாட்டு துறை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி அபகரிக்க முயல்வதாக சென்னை மாவட்ட வருவாய் அதிகாரி மூலம் போலி ஆவனம் மூலம் நிலத்தை அவரது உறவினர் பெயருக்கு மாற்றம் செய்துள்ளார். இதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனு மீதான விசாரணை நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி மகாதேவன், இந்த விவகாரத்தில் தற்போதைய நிலை தொடர வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை அக்டோபர் 8ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

அமைச்சர் ஒருவரே போலி ஆவனம் மூலம் நிலத்தை அபரித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த அமைச்சர்தான் சசிலாவின் பெங்களூர் சிறை அறைக்கு தேவையான பிரிட்ஜ், மிக்சி போன்ற சமையறைக்கு தேவையான  பொருட்களை அனுப்பியவர் என்பது குறிப்பிடத்தக்கது.