மதுரை: மதுரை பாலமேடு நகரில் 16ம் தேதி நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் சுமார் 700 காளைகள் பங்கேற்றன. அறுவடை பண்டிகையான பொங்கலின் ஒரு பகுதியாக இது தமிழகத்தின் கிராமப்புறங்களில் ஏற்பாடு செய்யப்படுகிறது.

ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி தலைமையிலான கண்காணிப்புக் குழுக்களின் மேற்பார்வையின் கீழ் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அளிக்கப்பட்ட  ஒரு மனுவை ஏற்க உச்ச நீதிமன்றம் 15ம் தேதி மறுத்துவிட்டது.

பாலமேடு மற்றும் அலங்காநல்லூரில் நடைபெறவிருக்கும் ஜல்லிக்கட்டில் பங்கேற்க 21 வயதுக்குக் குறைவானவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று மதுரை மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருந்தார்.

மாநிலத்தில் ஜனவரி 31 வரை நடைபெறும் ஜல்லிக்கட்டில் 2,000 காளைகள் பங்கேற்கின்றன. இந்த ஆண்டு நடைபெறும் போட்டிகளில் அவனியபுரத்தில் 730 காளைகளும், அலங்காநல்லூரில் 700 காளைகளும் பங்கேற்கின்றன.

இந்திய விலங்குகள் நல வாரியம் மற்றும் பீட்டா ஆகியோரால் மனு தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து, உச்சநீதிமன்றம் 2014 இல் ஜல்லிக்கட்டைத் தடை செய்தது, ஆனால் ஜல்லிக்கட்டு தமிழகத்தின் கலாச்சாரம் மற்றும் அடையாளத்தின் ஒரு முக்கிய அங்கம் என்று மாநில அரசு வலியுறுத்தியது.

சென்னையில் நடைபெற்ற பெரிய அளவிலான ஆர்ப்பாட்டங்களுக்குப் பின்னர் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு 2017 ஜனவரியில் இந்தத் தடை நீக்கப்பட்டது.