கடத்தல்காரர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 700 கிலோ போதைப் பொருட்கள் எரிக்கப்படும் காட்சி – வீடியோ

சென்னை:

டந்த ஆண்டு தமிழகத்தில் கடத்தல்காரர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட சுமார் 700 கிலோ அளவிலான போதைப் பொருட்கள், எரியூட்டப்பட்டன. இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

நாடு முழுவதும் போதைப்பொருட்கள் கடத்தப்படுவது அதிகரித்து வருகிறது. இதை தடுக்க காவல்துறையினர் பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகின்றனர். இருந்தாலும் போதைப்பொருட் கடத்தல் நிகழ்வுகள் தொடர்ந்து வருகின்றன.

அந்த வகையில் கடந்தஆண்டில் (2019)  533 கிலோ மரிஜுவானா, 77 கிலோ எஃப்ரிடைன், 4 கிலோ ஹெராயின் மற்றும் 980 கிராம் ஹாஷிஷ் எண்ணெய் உள்ளிட்ட 700 கிலோ அளவிலான பறிமுதல் செய்யப்பட்ட  போதை பொருட்கள்  பாதுகாப்பாக ஒரு எரியூட்டியில் போட்டு எரிக்கப்பட்டன.