இந்தியா: 7000 பேர் அமெரிக்காவிற்கு புகலிடம் கோரி விண்ணப்பம்

இந்தியாவில் இருந்து 7,000க்கும் மேற்பட்டவர்கள் அமெரிக்காவிற்கு புகலிடம் கோரி விண்ணப்பித்துள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான ஆணையம் சமீபத்தில் ஒரு ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கடந்த வருடம் மட்டும் இந்தியாவில் இருந்து ஏழாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் அமெரிக்காவில் தஞ்சமடைய விண்ணப்பித்துள்ளது தெரிய வந்துள்ளது. புகலிடம் கோரி விண்ணப்பித்தவர்களில் இது மிகப்பெரிய வரவேற்பு என அமெரிக்க பெருமிதம் கொண்டது. கடந்த ஆண்டு வரை உலகம் முழுவதும் 68.5 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்து உள்ளதாக ஆய்வு கூறுகிறது. 2017ம் ஆண்டு மட்டும் 16.2மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். ஒரு நாளைக்கு 44,500 பேரும், ஒவ்வொரு இரண்டு நொடிக்கும் ஒருவர் வீதம் இடம்பெயருகின்றனர்.
refuge
போர், வன்முறை மற்றும் துன்புறுத்துதல் காரணமாக உலக அளவில் அதிகமானோர் வளரும் நாடுகளுக்கு குடிபெயர்ந்து வருகின்றனர். காங்கோ ஜனநாயக குடியரசின் நெருக்கடி, தெற்கு சூடான் போர், மியான்மர் மற்றும் வங்காளதேசத்தின் போர் ஆகியவற்றின் காரணமாக ஆயிரக்கணக்கான ரோஹிங்கியா மக்கள் வளரும் நாடுகளுக்கு தஞ்சம் அடைந்தனர். இத்தகைய தஞ்சம் வளரும் நாடுகளை பெரிதளவில் பாதிக்கும் என கணிக்கப்படுகிறது.

அமெரிக்காவின் வடக்கு பகுதியில் அதிகளவிலான மக்கள் குடிபெயர்ந்துள்ளனர். வெனிசுலாவிற்கு தஞ்சம் அடைபவர்களின் எண்ணிக்கை 63 சதவிகிதம் அதிகரித்து 29,900 ஆக உள்ளது. 2017ம் ஆண்டில் 5ஆயிரத்திற்கும் அதிகமான கோரிக்கைகள் இதில் இடம்பெற்றன. மெக்சிகோ(26,100), சீனா (17400), ஹைதி(8600), இந்தியா( 7400) உள்ளிட்ட நாடுகளில் இருந்து வெனிசுலாற்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது. 168 நாடுகள் தேசியமயமாக்கலில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக ஆய்வு கூறுகிறது.
re
இந்தியாவிற்கு மட்டும் 1,97,146 அகதிகள் புகலிடம் கோரியுள்ளதாக அறிக்கை கூறுகிறது. 2013ல் இருந்து தஞ்சம் கோரும் நாடுகளில் சிரியாவும் இணைந்துள்ளது. துருக்கி 67,400 பதிவுகளையும், ஜெர்மனி 16,400 கோரிக்கை மனுக்களையும், பிரான்ஸ் 6600 விண்ணப்பங்களையும் பெற்றுள்ளது.

கடந்த ஆண்டின் இறுதியில் மியான்மரில் இருந்து பங்களாதேசம்(932,200), தாய்லாந்து(100,000), மலேசியா(98,000), இந்தியா(18,100) உள்ளிட்ட நாடுகளுக்கு அதிகளவிலான மக்கள் தஞ்சம் அடைந்துள்ளனர். மோதல்கள் மற்றும் துன்புறுத்துதல்களில் இருந்து தப்பிக்கும் விதமாக சொந்த நாட்டை விட்டு வெளியேறிய அகதிகளின் எண்ணிக்கை 68 மில்லியனாக இருப்பதாக அறிக்கையில் கூறுகிறது. 2016ம் ஆண்டு மட்டும் குடிபெயர்ந்தவர்களின் எண்ணிக்கை 2.9 மில்லியன் அதிகரித்துள்ளது.
re1
”எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. இதுவரை 15 நாடுகள் அகதிகளின் கோரிக்கைகளை ஏற்பதற்கான திட்டங்களை வகுத்து வருகின்றன. அகதிகளுக்காக உலக அளவில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என ஐ.நா.வின் அகதிகள் ஆணையம் தெரிவித்துள்ளது.