70வது பிறந்தநாள்: ரஜினிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை:

டிகர் ரஜினிகாந்தின் 70வது பிறந்தநாள் தமிழகம் முழுவதும் அவரது மக்கள் மன்றம் நிர்வாகி களால் கொண்டாடப்பட்டு வருகிறது. நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு அவரக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

ரஜினிகாந்தின் பிறந்தநாளையொட்டி, அவருக்கு வாழ்த்து தெரிவிக்க அவரது ரசிகர்கள், போயஸ் தோட்டப்பகுதியில் உள்ள ரஜினி இல்லம் முன்பு குவிந்தனர். அவர்களுக்கு ரஜினியினி மனைவி லதா ரஜினிகாந்த் சாக்லெட் கொடுத்து அனுப்பி வைத்தார்.

மேலும்,  தென் சென்னை ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை பட்டினப்பாக்கத்தில் நடை​பெற்றது. இந்த   நிகழ்ச்சியில் ஏழை, எளியவர்களுக்கு உயர்கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டன. மேலும், அங்கு கூடியிருந்த ஏராளமான ரசிகர்கள் கேக் வெட்டி, பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடினர்.

இந்தநிலையில், நடிகர் ரஜினிகாந்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து டிவிட் பதிவிட்டு உள்ளார்.

அதில்,  எழுபதாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் என் இனிய நண்பர், சூப்பர் ஸ்டார் @rajinikanth அவர்களுக்கு இதயமார்ந்த, பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நல்ல உடல் – மனநலத்துடனும், வளத்துடனும், மிக நீண்ட வாழ்க்கை வாழ வாழ்த்தி மகிழ்கிறேன் என்று தெரிவித்து உள்ளார்.

“ரஜினி மிக நீண்ட வாழ்க்கை வாழ வேண்டும்” – ஸ்டாலின் வாழ்த்து

நடிகர் ரஜினிகாந்த் நல்ல உடல், மன நலத்துடன் நீண்ட நாள் வாழ வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.