சென்னையில் 70 வயது மருத்துவர் இன்று கொரோனாவுக்கு பலி…

சென்னை:

சென்னையில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், இன்று கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த  70 வயது மருத்துவர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளார். இது மருத்துவர்களிடையே அச்சத்தையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் சொந்தமாக மருத்துவமனை நடத்தி வந்த மருத்துவர் கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில்,  வானகரத்தில் உள்ள பிரபல தனியார் மருத்துவ மனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வந்ததார். அங்குசிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்து உள்ளதாக கூறப்படுகிறது.

இது சக மருத்துவர்களிடையே சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.