தமிழகத்தில் 71 லட்சம் மரக்கன்றுகள்! நிதிஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியீடு

சென்னை:

மிழகத்தில் 71 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. இந்த மெகா திட்டத்திற்கு 198 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி உள்ளதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மறைந்த தமிழக முன்னாள்  முதல்வர் ஜெயலலிதாவின் 71-வது பிறந்த நாளையொட்டி, தமிழகம் முழுவதும் 71 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி, கடந்த பிப்ரவரி மாதம் 25ந்தேதி, அன்று மரக்கன்றுகள் நடும் திட்டத்தினை சென்னை காமராஜர் சாலையில் உள்ள பாவேந்தர் பாரதிதாசன் சிலை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார்.

அதைத்தொடர்ந்து, வனப்பகுதிகளிலும், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளிலும், அரசு மற்றும் தனியார் அலுவலக வளாகங்களிலும், சாலையோரங்களிலும், பூங்காக்களிலும், பெரிய அளவிலான குடியிருப்புகளிலும் நடப்பட்டு பராமரித்து பாதுகாக்கப்படும்,  என்றும்,  தமிழ்நாட்டு பருவநிலை மற்றும் மண்வளத்திற்கு ஏற்ற மரக்கன்றுகளான ஆல், இலுப்பை, புன்னை, மந்தாரை, புங்கன், மகிழம், பூவரசு, வேம்பு போன்ற பல்வேறு மரக்கன்றுகள் நடப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

இந்த நிலையில்,  தனியார் பள்ளி, கல்லூரிகள், பூங்காக்கள், அரசு அலுவலகங்கள், வனப்பகுதிகள் என அனைத்து இடங்களிலும் 71 லட்சம் மரக்கன்றுகளை நட்டு, பசுமையை உருவாக்க தமிழக அரசு, 198 கோடியே 57 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டுள்ளது.

இந்த பணிகளை விரைந்து முடிக்கவும் உத்தரவிட்டப்பட்டுள்ளது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: 71 lakhs of trees, Government of Tamilnadu, tamilnadu
-=-