சென்னை:

மிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடை பெற்றது. மதுரையில் சித்திரை திருவிழாவையொட்டி இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. அதுபோல 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் 38 பாராளுமன்ற தொகுதிகளில், 71.87  சதவிகித வாக்கு பதிவாகி உள்ளது,  சட்டமன்ற இடைத்தேர்த லில் 75.57  சதவீதமும் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளதாக தமிழக தேர்தல்ஆணையம் தெரிவித்து உள்ளது.

லோக்சபா தொகுதியில் அதிகபட்சமாக தருமபுரியில் 85.49% சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. குறைந்த பட்சமாக தென் சென்னை தொகுதியில் 56.41% வாக்குகள் பதிவாகின.

சட்டமன்ற தொகுதிகளில் அதிக பட்சமாக சோளிங்கர் தொகுதியில், 82.26 சதவிகிதம் பதிவாகி உள்ளது. குறைந்த பட்சமாக பெரம்பூர் தொகுதியில் 64.01 சதவிகிதம் வாக்குகள் பதிவாகி உள்ளது.

தமிழகத்தில் 38 நாடாளுமன்ற தொகுதி, 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணி முதல் நடைபெற்று வருகிறது. மாலை 6மணியுடன் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது.

வாக்குப்பதிவு  சதவிகிதம் மற்றும் எத்தனை பேர் வாக்களித்தனர் என்பது குறித்து இன்று மாலை விரிவாக வெளியிடப்படும் என்றும் அறிவித்த தேர்தல் ஆணையர், தற்போதைய நிலையில், தமிழகத்தில் 38 பாராளுமன்ற தொகுதிகளில், 71.87  சதவிகிதமும், சட்டமன்ற இடைத்தேர்த லில் 75.57  சதவீதமும் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளதாக தெரிவித்தார்.

நேற்று இரவு வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் செய்தியளார்களிடம் பேசிய  தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, மக்களவைத் தேர்தலில் 69 புள்ளி 55 சதவிகித வாக்குகள் பதிவாகி  இருப்பதாகவும்,  அதிகபட்சமாக நாமக்கல்லில் 78 % வாக்குகளும், குறைந்த பட்சமாக மத்திய சென்னையில் 57 புள்ளி 05 % வாக்குகளும் பதிவாகி உள்ளதாக அவர் கூறினார்.

இதே போன்று சடமன்ற இடைத் தேர்தலில் 77.62 % வாக்குகள் பதிவாகி உள்ளதாக அவர் குறிப்பிட்டார். இதில் அதிக பட்சமாக அரூர் தொகுதியில் 86 புள்ளி 96 % வாக்குகளும், குறைந்தபட்சமாக சாத்தூர் தொகுதியில் 60 புள்ளி 87 % வாக்குகளும் பதிவாகி உள்ளதாக அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.