வாஷிங்டன்:

அமெரிக்காவின் டென்னிசி மேரிவில்லே பகுதியை சேர்ந்தவர் அல்மேடா (வயது 72). மூதாட்டியான இவர் 2016-ம் ஆண்டு முதல் கணவரை பிரிந்துவிட்டார். தனிமையில் வாழ்ந்து வந்த இவருக்கு ஒரு பிறந்தநாள் விழா மூலம் கேரி ஹார்ட்விக் என்ற 19 வயது வாலிபருடன் அல்மேடாவுக்கு பழக்கம் ஏற்பட்டது.

நாளடைவில் இருவரும் காதலிக்க தொடங்கி திருமணம் செய்து கொள்ளவும் முடிவு செய்தனர். இரு குடும்பத்தினர் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. இதற்கு வயது தான் காரணம். பின்னர் குடும்பத்தாரை சமாதானம் செய்து விட்டு திருமணம் செய்து கொண்டனர்.

இருவருக்கும் இடையில் 58 வயது வித்தியாசம் இருந்தபோது மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி வருகின்றனர். அல்மேடாவுக்கு 6 பேரக்குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.