பரோலில் உள்ள பேரறிவாளனுடன் 10 நாளில்  720 பேர் சந்திப்பு!

--

சென்னை,

ராஜீவ்காந்தி கொலை கைதியான பேரறிவாளன்  தற்போது 1 மாத பரோல் காரணமாக வீட்டில் இருக்கிறார். அவரை கடந்த 10 நாட்களில் சுமார் 720 பேர் சந்தித்து பேசியுள்ளதாக போலீசார் கூறி உள்ளனர்,.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு காரணமாக சிறையில் இருந்து வந்த பேரறி வாளன், தனது தஉடல்நலமில்லாத தந்தையை காண வேண்டும் என்பதாக பலமுறை பரோலுக்கு விண்ணப்பித்தும், கிடைக்காத நிலையில், அவரது தாயார் அற்புதம்மாள்,  முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்பட இந்நாள் முதல்வர் எடப்பாடி மற்றும் எதிர்க்கட்சி தலைவர்களையும் சந்தித்து கோரிக்கை விடுத்து வந்தார்.

26 ஆண்டுகளாக சிறையில் இருந்து பேரறிவாளனுக்கு ஒரு மாத காலம் பரோலில் விடுவிக்க பல்வேறு நிபந்தனைகளுடன் தமிழக அரசு உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து கடந்த மாதம் 24ந்தேதி பேரறிவாளனுக்கு பரோல் கிடைத்தது. இதற்கான அரசாணையை பிறப்பித்தும், வேலூர் சிறைச்சாலைக்கு அனுப்பியது .

இதனைத் தொடர்ந்து பேரறிவாளன் வேலூர் சிறையில் இருந்து ஒரு மாத பரோலில் விடுவிக்கப்பட்டுள்ளார்.  அவரை காவல்துறை வேனில் போலீசார் திருப்பத்தூரில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.

அவர் வீட்டுக்கு வந்த 10 நாட்களில் அவரது நலம்விரும்பிகள், அரசியல் கட்சி தலைவர்கள், உறவினர்கள் உள்பட சுமார்  720 பேர் நேரில் வந்து சந்தித்து பேசியுள்ளதாக போலீசார் கூறி உள்ளனர்.

பரோலில் உள்ள பேரறிவாளன் வீட்டிற்கு வெளியே போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.