சென்னை:
சென்னையில் இன்று (22ந்தேதி)  ஊரடங்கை மீறியதாக 7261 பேர் மீது வழக்கு செய்யப்பட்டு இருப்பதாகவும், இதனால் மொத்த வழக்கு 17ஆயிரத்து 865 ஆக உயர்ந்துள்ளதாகவும் சென்னை காவல்துறை அறிவித்து உள்ளது.
கொரோனா தொற்று பரவலை தடுக்க கடந்த 9ந்தேதி நள்ளிரவு) முதல் சென்னை உள்பட 4 மாவட்டங்களில்  முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், சென்னையில் இன்று மட்டும் 144 உத்தரவை மீறியதாக 7,261 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் கடந்த 3 நாட்களில் 17, 865 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இன்று மட்டும் 5009 இருச்சக்கர வாகனங்கள், 138 மூன்று சக்கர வாகனங்கள், 231 நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாகவும், இதுவரை மொத்தம் 16,043 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
 முககவசம், சமூக இடைவெளியை பின்பற்றாதது தொடர்பாக  இன்று மட்டும் 4007 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும், இதுவரை 7524 பேரிடம் அபராதம் வசூலித்து இருப்பதாகவும் தமிழக காவல்துறை தெரிவித்து உள்ளது.