72வது சுதந்திர தின விழா: கோட்டையில் தேசியக் கொடியேற்றினார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

சென்னை:

நாடு முழுவதும் இன்று 72வது சுதந்திர தின விழா கோலாகலமாக  கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை கோட்டை கொத்தளத்தில் 2வது முறையாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

டில்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி  தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி மிகப்பெரிய  உரையாற்றினார். இந்த விழாவில் முன்னாள் பிரதமர்கள் மன்மோகன் சிங், தேவகவுடா, மத்திய மந்திரிகள், பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே அத்வானி, பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

டில்லி கொடியேற்றம் முடிந்ததும் மாநிலங்களில், மாநில முதல்வர்களால் கொடி ஏற்றப்பட்டது. தமிழகத்தில்,தலைமை செயலகம் அமைந்துள்ள செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

இன்று காலை 9 மணியளவில் கோட்டை கொத்தளத்திற்கு வருகை புரிந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு  முப்படை அணிவகுப்பு மரியாதை கொடுக்கப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட முதல்வர், 9.15 மணியளவில் தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் சுதந்திர தின உரை நிகழ்த்தினார்.

இந்த விழாவில் தமிழக சபாநாயகர், சென்னை உயர்நீதி மன்ற நீதிபதிகள்  அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், உயர் அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

எடப்பாடி பழனிசாமி தமிழக முதல்வரான பிறகு கோட்டையில் 2-வது முறையாக தேசியக்கொடி ஏற்றியது குறிப்பிடத்தக்கது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: 72nd Independence Day: Chief Minister Edappadi Palanisamy hoisted the national flag in the fort, 72வது சுதந்திர தின விழா: கோட்டையில் தேசியக் கொடியேற்றினார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
-=-