சென்னை: நாட்டின் 72வது குடியரசு தின விழாவையொட்டி, சென்னை  மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டிருந்த கம்பத்தில்  தேசியக்கொடி ஏற்றி மரியாதை செய்தார் ஆளுநர் பன்வாரிலால். அவருடன்  முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தினர்.

நாட்டின் 72-வது குடியரசு தின விழா இன்று  இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.  தமிழகத்தில்,  சென்னை மெரினா கடற்கரை சாலையில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு குடியரசு தின விழாவில் கலைநிகழ்ச்சிகள் இன்று விழா நடைபெற்றது.

முன்னதாக, இன்று காலை சென்னை கடற்கரை சாலையில் உள்ள காந்தி சிலை அருகே அமைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பம்தில  ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் தேசியக் கொடி ஏற்றினார். இந்த விழாவில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். தேசியக் கொடியேற்றிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், பல்வேறு படைப்பிரிவுகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.

முப்படையின் வீரத்தை பறைசாற்றும் அணிவகுப்புகள், அரசுத் துறைகளின் சார்பில் அலங்கார ஊா்திகளின் அணிவகுப்புகள் போன்றவையும் விழாவில் இடம்பெற்றன.அதைத்தொடர்ந்து, தென்னகப் பண்பாட்டு மையத்தின் சார்பில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஆனால், கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக, பள்ளி,கல்லூரி மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெறவில்லை.

குடியரசு தின விழாவின்போது, வீரதீரச் செயலுக்கான அண்ணா பதக்கம் வழங்கப்பட்டது. மகாத்மா காந்தியடிகள் பதக்கம், கோட்டை அமீா் விருது ஆகிய விருதுகளுடன் நெல் உற்பத்தித் திறனுக்கான நாராயணசாமி நாயுடு விருது அளிக்கப்பட்டது. முதல் முறையாக இந்த விருதானது, நாராயணசாமி நாயுடு பெயரில் வழங்கப்பட்டது.

கால்நடை மருத்துவர் பிரகாஷ், லிவலத்தை சேர்ந்த உதவி ஆசிரியர் முல்லை,  திருமங்கலத்தை சேர்ந்த ரயில் ஓட்டுநர் சுரேஷ், நீலகிரி – மஞ்சூர் பகுதியை சேர்ந்த புகழேந்திரன் ஆகியோருக்கு தமிழக அரசின் அண்ணா பதக்கம் வழங்கப்பட்டது.

கோவை அப்துல் ஜப்பாருக்கு மத நல்லிணக்கத்திற்கான கோட்டை அமீர் பதக்கம் வழங்கப்பட்டது.

சென்னையை சேர்ந்த ஆய்வாளர் மகுடீஸ்வரிக்கு காந்தியடிகள் காவலர் பதக்கம் வழங்கப்பட்டது,

சேலம் மண்டலம் மத்திய புலனாய்வு பிரிவு உதவி ஆய்வாளர் செல்வராஜுக்கு காவலர் பதக்கம் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

அதுபோல  கீழ்க்கொடுங்காலூர் காவல் நிலைய தலைமைக் காவலர் ராஜசேகரனுக்கு பதக்கம் வழங்கப்பட்டது.

முன்னதாக, ராஜாஜி சாலையில் உள்ள போர் நினைவுச் சின்னத்துக்கு கவர்னர் பன்வாரிலால்  மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.