விருதுநகர்:

ந்தியா சுதந்திரம் அடைந்து 73 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், தற்போதுதான் முதன் முறையாக விருதுநகர் அருகே உள்ள ஒரு கிராமத்திற்கு பேருந்து வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

நாட்டில் விஞ்ஞான வளர்ச்சி ஒருபுறம் விண்ணை நோக்கி சென்றுகொண்டிருக்கையில், மற்றொரு புறம் வரிச்சுமையால் மக்கள் வேலைவாய்ப்புகளை இழந்து அல்லல் பட்டு வரும் நிலையில், நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்து 73 ஆண்டுகள் ஆன பிறகே ஒரு கிராமத்தைச் சேர்ந்த மக்கள் அரசு பேருந்து வசதியை பெற்றுள்ளனர். …

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த மீனாட்சி புரம் என்ற கிராமத்திற்கு தற்போதுதான் முதன் முறையாக பேருந்து வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. சுமார் 4 கி.மீட்டர் தூரம் நடந்து வந்தே இதுவரை பேருந்தில் பயணம் செய்ய வேண்டிய நிலை நீடித்து வந்த நிலையில், தற்போது விடிவு காலம் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்து 73 ஆண்டுகள் ஆகியும், அந்த பகுதி மக்கள் சுதந்திரம் கிடைக்காமல்,  பல்வேறு போராட்டங்களையும், மனுக்களையும் கொடுத்து ஓய்ந்து போன நிலையில், தற்போது பேருந்து வசதி ஏற்படுத்தி தரப்பட்டு உள்ளது.

சமீபத்தில் தமிழக முதல்வர்எடப்பாடி பழனிச்சாமி மின்சார பேருந்து சேவையை தொடங்கி வைத்த அன்று, மீனாட்சிபுரம் கிராமத்துக்கும் ஒரு பேருந்து சேவையை தொடங்கி வைத்துள்ளார். தற்போது அந்த கிராமத்துக்கு அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இந்த அந்த கிராம மக்களிடையே வியப்பையும், வரவேற்பையும் பெற்றுள்ளது.

இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்து 73 ஆண்டுகள் ஆகி உள்ள நிலையில், தற்போதுதான் பேருந்து இயக்கப்படுவது…..  எதைக்காட்டுகிறது… அரசாங்கத்தின் மக்கள் மீதான அக்கறையின்மையையா? அல்லது அந்த கிராமத்து மக்களின் அப்பாவித்தனத்தையா?