15 நாட்களில் தமிழகத்தில் 736 பேர் மரணம்

சென்னை :

கொரோனா வைரஸ் குறித்து தமிழக சுகாதாரத் துறை அளித்துள்ள புள்ளிவிவரங்கள் படி, இதுவரை தமிழகத்தில் 94049 பாதிக்கப்பட்டுள்ளனர் 52926 குணமடைந்துள்ளனர் 1264 பேர் மரணமடைந்துள்ளனர்.

சென்னையில் மட்டும் 60533 பாதிக்கப்பட்டுள்ளனர் 36826 குணமடைந்துள்ளனர் 929 பேர் மரணமடைந்துள்ளனர்.

சென்னை நீங்கலாக தமிழகத்தின் பிற மாவட்டங்களில் 33516 பாதிக்கப் பட்டுள்ளனர் 16100 குணமடைந்துள்ளனர் 335 பேர் மரணமடைந்துள்ளனர்.

கடந்த 15 நாட்களில் தமிழகத்தின் மொத்த உயிரிழப்பு 736 சென்னையில் 507 சென்னை நீங்கலாக பிற மாவட்டங்களில் 229. தமிழகத்தில் கடந்த 15 நாட்களில் 58 சதவீத மரணங்கள் நிகழ்ந்திருப்பதும் மரணமடைவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதும் மிகுந்த வேதனையளிப்பதாக உள்ளது.