புதுச்சேரி

ரே வீட்டில் பதுக்கப்பட்டிருந்த பல கோடிக்கான ரூபாய் மதிப்புள்ள 74 புராதன சிலைகளைத் தமிழக சிலை தடுப்பு காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

தமிழக கோவில்களில் உள்ள புராதன சாமி சிலைகளைத் திருடி வெளிநாட்டில் விற்பனை செய்வது அதிகரித்து வருகிறது.  இதையொட்டி கடந்த 2016 ஆம் வருடம் தமிழக சிலை த்டுப்புப்பிரிவு காவல்துறையினர் தீனதயாளன என்பவரைச் சென்னை ஆழ்வார்பேட்டையில் கைது செய்தனர்.  அவர் அளித்த தகவலின் அடிப்படையில் புதுச்சேரியை சேர்ந்த புஷ்ப ராஜனிடம் விசாரணை நடந்தது.

புதுச்சேரியில் கலைப்பொருட்கள் விற்பனைக் கூடம் நடத்தி வந்த புஷ்பராஜன் அளித்த தகவலின் அடிப்படையில் உப்பளம் கோலாஸ் நகரில் உள்ள ஒரு வீட்டில் ரூ. 50 கோடி மதிப்பிலான சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டது.  அந்த வீட்டின் உரிமையாளரான ஆனந்தி என்னும் பெண் கைது செய்யபடார்.  அதன் பிறகு புதுச்சேரியில் ரோமன் ரோல்ண்ட் வீதியில் உள்ள பால் ரத்தினம் என்பவர் வீட்டில் நேற்று சோதனை நடந்தது.

பால் ரத்தினம் பிரெஞ்சு நாட்டுக் குடியுரிமை பெற்றவர் ஆவார்.  இவர ஏற்கனவே கைதான ஆனந்தியின் சகோதரரும் ஆவார்.  இவருடைய வீட்டில் சோதனை நடத்திய தமிழக சிலை தடுப்பு பிரிவு காவல்துறை மற்றும் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள்   60 ஐம்பொன் சிலைகள்  மற்றும் 14 கற்சிலைகள் என 74 சிலைகளைக் கைப்பற்றினர்.

கைப்பற்றப்பட்ட சிலைகளின் மதிப்பு பல கோடிக்கணக்கான ரூபாய்கள் என  கூறப்படுகிறது.   இந்த சிலைகளைப் புதுச்சேரி நீதிமன்றத்தின் ஒப்புதலுடன் காவல துறையினர் சென்னைக்குக் கொண்டு வந்துள்ளனர்.    இது குறித்து விசாரணை  தொடர்ந்து நடைபெற்று வருகிறது.