சிம்லா

நேற்று நடந்த இமாசலப் பிரதேச சட்டசபை தேர்தலில் 74% சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது.

இமாசலப் பிரதேச சட்டசபை தேர்தல் நேற்று ஒரே கட்டமாக 68 தொகுதிகளிலும் நடை பெற்றது.  இதில் ஆளும் கட்சியான காங்கிரஸும், பா ஜ க வுக்கும் இடையே போட்டி உள்ளது.   காங்கிரஸ் சார்பில் தற்போதைய முதல்வ்ரான வீரபத்ர சிங், பா ஜ க சார்பில் பிரேம் குமர் துமல் ஆகியோர் முதல்வர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

காங்கிரஸ் – பா ஜ க நேரடி போட்டி உள்ள அதே நேரத்தில் பகுஜன் சமஜ் கட்சி 42 தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 14 தொகுதிகளிலும், ஸ்வாபிமான் கட்சி, லோக் பந்தன் கட்சி ஆகியவை தலா 6 தொகுதிகளிலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 3 தொகுதிகளிலும் போட்டியில் இறங்கியுள்ளன.  நேற்று அமைதியான முறையில் வாக்குப் பதிவு நடைபெற்றது.

வாக்குப்பதிவு ஒப்புகைச்சீட்டை வழங்கும் 11283 இயந்திரங்கள் இந்த தேர்தலில் பயன்படுத்தப்பட்டுள்ளன.  இந்த இயந்திரங்களைப் பற்றி மக்களிடம் இருந்து எந்த புகாரும் எழவில்லை எனினும், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 297 இயந்திரங்கள் மாற்றப்பட்டுள்ளன.

இந்த தேர்தலில் முதன் முறையாக 74% வாக்குகள் பதிவாகி உள்ளன.  இதற்கு முன்பு 2012ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 73.5% வாக்குகள் பதிவானதே இதுவரை அதிகபட்சமாக இருந்தது.    2014ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் 64.45% வாக்குகளே இம்மாநிலத்தில் பதிவானது குறிப்பிடத்தக்கது.