பொறியியல் கல்வி கவுன்சிலிங்கிற்கு 7,420 பேர் விண்ணப்பம்

--

சென்னை:

பொறியியல் படிப்புக்கான கவுன்சிலிங்கில் கலந்துகொள்ள 7,420 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இன்று மாலை 6 மணி நிலவரப்படி இந்த எண்ணிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 42 அரசு மையங்கள் மூலம் ஆயிரத்து 50 பேரும், இதர இடங்களில் 6 ஆயிரத்து 370 பேரும் விண்ணப்பித்துள்ளனர் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.