74வது சுதந்திர தினம்: செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் மோடி

டெல்லி: நாட்டின் 74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி  செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடியை ஏற்றினார்.

முன்னதாக செங்கோட்டை வந்த பிரதருக்கு பிரதமரை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் உள்பட மூத்த ராணுவ அதிகாரிகள் வரவேற்றனர். அதைத் தொடர்ந்து  முப்படைகளின் அணிவகுப்பு கொடுக்கப்பட்டது.

அதையடுத்து செங்கோட்டையில் ஏறிய பிரதமர் மோடி  அங்கு கொடியேற்றினார்.

கொரோனா பரவல் காரணமாக குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே  சுதந்திர தின விழாவில் கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்ட நிலையில், நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைத்து பிரமுகர்கள் முகக்கவசம் அணிந்து,  தனிநபர் இடைவெளியுடன்  அமர்ந்திருந்தனர்.

மேலும் நிகழ்ச்சியில்,  மத்திய அமைச்சர்கள்- வெளிநாட்டு தூதர்கள் பங்கேற்றனர்.

 பிரதமர் மோடி 7 -வது முறையாக சுதந்திர தின விழாவில் செங்கோட்டையில் கொடியேற்றினார்.

இதையொட்டி செங்கோட்டையை சுற்றி பலத்த பாதுகாப்பு அமைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்திநினைவிடத்திற்கு வந்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.