னாஜி

கோவாவின் மிகப் பெரிய கொரோனா மருத்துவமனையான கோவா மருத்துவக் கல்லூரி மருத்துவம்னயில் ஆக்சிஜன் இல்லாமல் 75 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இரண்டாம் அலை கொரோனா பரவலால் இந்தியா முழுவதும் பாதிப்பு அதிகரித்து வருகிறது.  மிகச் சிறிய யூனியன் பிரதேசமான கோவாவில் நேற்று 2,455 பேர் பாதிக்கப்பட்டு மொத்தம் 1,32,585 பேருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது.  இதில் 1,998 பேர் உயிர் இழந்து 98,200 பேர் குணமாகி தற்போது 32,387 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இந்த எண்ணிக்கைகள் அதிகரிப்பால் கோவாவில் ஆக்சிஜன் உள்ளிட்ட பல மருத்துவப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.  கோவாவில் 48.1 சதவிகித அளவில் பாதிப்பு உள்ளது.   இது நாட்டில் மிகவும் அதிகமானதாகும்.  கோவாவில் மிகப் பெரிய கொரோனா மருத்துவமனையாக கோவா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ளது.  இங்கும் படுக்கைகள் காலி இல்லாத நிலை உள்ளது.

இந்த மருத்துவமனையில் நோயாளிகளை எடுத்துச் செல்லும் சக்கர நாற்காலிக்குக் கூட தட்டுப்பாடு உள்ளது.  இதற்காக 8 மணி நேரம்  வரை காத்திருக்க நேரிடுகிறது.   இவ்வளவு கஷ்டப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பிறகும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் மக்கள் பெரிதும் அவதியுற்று வருகின்றனர்.   போக்குவரத்து பிரச்சினைகளால் மருத்துவமனைக்குத் தேவையான அளவு ஆக்சிஜன் வரவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால் கடந்த 4 நாட்களில் 75 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதில் செவ்வாய்க்கிழமை 26 பேர், புதன்கிழமை 21 பேர், வியாழன் அன்று 15 பேர் மற்றும் வெள்ளிக்கிழமை 13 பேர் ஆக்சிஜன் இன்றி உயிர் இழந்துள்ளனர்.   இந்த மரணங்கள் அனைத்தும் நள்ளிரவு 1 மணி முதல் விடியற்காலை 6 மணிக்குள் நிகழ்ந்துள்ளன.

இந்த மரணங்களையொட்டி எதிர்க்கட்சியான கோவா முன்னேற்றக் கட்சி முதல்வர் பிரமோத் சாநவத் மற்றும் மூத்த அதிகாரிகள் மீது காவல்துறையில் புகார் அளித்துள்ளது. பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி முதல்வர் மற்றும் சுகாதார அமைச்சர் மீது கொலைக் குற்றம் சாட்டி கிரிமினல் வழக்குப் பதிய உள்ளது.    கோவாவை ஆளும் பாஜக அரசின் பொறுப்பற்ற தன்மையால் மரணங்கள் நிகழ்வதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.