வாட்ஸ்அப் மூலம் 7500 கோடி புத்தாண்டு வாழ்த்துக்கள்: இந்தியா எவ்வளவு தெரியுமா?

புத்தாண்டு தொடங்கியதை தொடர்ந்து சமூக வலைதளங்களான வாட்ஸ்அப், முகநூல், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்றவைகள் மூலம் வாழ்த்துக்கள் பரிமாறப்பட்டது.

இந்நிலையில், புத்தாண்டு அன்று இரவு சுமார் 1 மணி நேரம் வாட்ஸ்அப் செயலிழந்தது. அதிக அளவிலான புத்தாண்டு பகிர்வு காணமாகவே வாட்ஸ்அப் செயலிழந்ததாக கூறப்பட்டது.

புததாண்டு அன்று 20 மில்லியன் இந்தியர்கள் புத்தாண்டு வாழ்த்துக்களை வாட்ஸ்அப் மூலம் அனுப்பியதாக வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்து உள்ளது.

இந்நிலையில், 2018 ஆம் ஆண்டு புத்தாண்டு வாழ்த்துகளை வாட்ஸ்அப்பில் உலகம் முழுவதும் இருந்து  7500 கோடி பேர்  பகிர்ந்து கொண்டதாகவும், இதில் 20 மில்லியன்  இந்தியர்கள் வாட்ஸ்அப் மூலம் வாழ்த்து செய்திகளை அனுப்பி சாதனை படைத்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது.

டிசம்பர் 31, 2017 இரவு 11:50 மணி முதல் 12 மணி வரை சுமார்   சுமார் 20 பில்லியன் இந்தியர்கள் வாட்ஸ்அப் மூலம்  புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

இந்த 20 பில்லியன் மக்கள் பயன்பாட்டினால் வாட்ஸ்அப் செயலி மிகப்பெரிய மைல்கல்லை அடைந்திருப்பதாகவும் அந்நிறுவனம் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது. இதனுடன் வாட்ஸ்அப்பில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் புதிய அப்டேட்களுக்கு பின்பு நாள் ஒன்றுக்கு 300 மில்லியன் ஆக்டிவ் யூசர்கள் வாட்ஸ்அப்பை பயன்படுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் புத்தாண்டு அன்று உலகம் முழுவதும் 7500 கோடி பேர் வாழ்த்து செய்திகளை வாட்ஸ்அப் மூலமாக பகிர்ந்துள்ளதாகவும்,  மேலும்,  பேஸ்புக்கில் 1300 கோடி  புகைப்படங்கள் மற்றும் 500 கோடி வீடியோ காட்சிகள் அனுப்பப்பட்டுள்ளது என்றும் தெரிவித்து உள்ளது.

இதன்ல் காரணமாகவே  வாட்ஸ்அப் உலகளாவிய அளவில் சுமார் ஒரு மணிநேரம் செயலிழந்தது என்பது குறிப்பிடத்தக்கது.