7,500 ஆண்டுகளுக்கு முன் ஜிப்ரால்டரில் வாழ்ந்த பெண்ணின் முகத்தை உருவாக்கிய விஞ்ஞானிகள்

ஜிப்ரால்டரில் கிடைத்த 7500 ஆண்டுகள் பழமையான மண்டை ஓட்டின் பகுப்பாய்வு அங்கு வாழ்ந்த கற்கால மனிதர்களையும், மத்தியதரை கடல் பகுதி முழுவதும் எங்கெல்லாம் பரவி வாழ்ந்தார்கள் என்ற தகவல்களை வெளிப்படுத்தியுள்ளது.

1996 ஆம் ஆண்டில், ஜிப்ரால்டரில் ஒரு குகைக்குள் நுழைந்த தொல்பொருள் ஆய்வாளர்கள், அங்கு மனித எலும்புகள் அடக்கம் செய்யப்பட்ட ஒரு புதைகுழியைக் கண்டறிந்தனர். அவற்றில் ஒரு மண்டை ஓடும் இருந்தது.

அங்கு செய்யப்பட்டிருந்த அடக்கம் மிகவும் பழமையானது என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அறிந்திருந்தனர். மீன், பறவை மற்றும் பாலூட்டி எலும்புகள் மற்றும் செதுக்கப்பட்ட பிளின்ட் பொருள்களைக் கொண்ட வண்டல் மண் அடுக்குக்கும் கீழே இது கண்டுபிடிக்கப்பட்டது. அடக்கம் செய்யப்பட்ட காரணத்தால் அந்த மண்டை ஓடு சேதமடைந்து காணப்பட்டது. பின்னர் இது ஜிப்ரால்டர் தேசிய அருங்காட்சியகத்தின் சேகரிப்பில் வைக்கப்பட்டு இன்னமும் பாதுகாக்கப்படுகிறது.

1996 ல் ஜிப்ரால்டரில் யூரோப்பா பாயிண்டில் ஒரு குகையில் கண்டுபிடிக்கப்பட்ட மனித மண்டை ஓடு – இமானுவல் ஜான்

அந்த மண்டை ஓட்டின் வயது கண்டறிய முடியாமல், பல ஆண்டுகளாக ஒரு மர்மமாகவே இருந்தது. 2019 ஆம் ஆண்டில், இந்த ஆய்வுகளின் மைல்கல்லாக, மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள், டி.என்.ஏ பகுப்பாய்வுகள் ஆகியவற்றின் முடிவுகள் வெளியாகின.  மூலம் இந்த மண்டை ஓடு 7,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு பெண்ணுக்கு சொந்தமானது என்பதை அறியமுடிந்தது. இதுவே, இன்றுவரை கண்டறியப்பட்டதிலேயே, ஜிப்ரால்டரில் வாழ்ந்த ஒரு நவீன பெண்ணின் மிகப் பழமையான மிச்சமாகவும் அமைந்துள்ளது. ஐபீரிய தீபகற்பத்தின் கிழக்கே மேற்கொள்ளப்பட்ட மரபணு பகுப்பாய்வுகள், மண்டை ஓட்டின் வம்சாவளியினர் இன்னும் இருப்பதையும் வெளிப்படுத்தியது. மத்தியதரைக் கடல் முழுவதிலுமிருந்து பெறப்பட்ட மரபணுக்கள், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களுக்கு ஐரோப்பா முழுவதும் விவசாயம் பரவும்போது பண்டைய மனிதர்கள் எவ்வாறு பயணித்தனர் என்பது பற்றிய புதிய தடயங்களை அளித்தது.

யூரோப்பா பாயிண்ட் கலங்கரை விளக்கம் ஜிப்ரால்டர் தீபகற்பத்தின் தென்கிழக்கு முனையில் உள்ளது. கல்பியாவின் மண்டை ஓடு 1996 இல் இதன் அருகிலுள்ள ஒரு குகையில் கண்டுபிடிக்கப்பட்டது. ஜேசெக் சோபோட்னிக் / ஏஜ் ஃபோட்டோஸ்டாக்

ஜிப்ரால்டர் தேசிய அருங்காட்சியக குழு, தடயவியல் உடற்கூறியல் முறையில் அந்த மண்டை ஓட்டின் முகத்தை புனரமைத்து, முழு முகத்தை உருவாக்க முடிவு செய்து பணியைத் துவக்கினர். கணினிகள் மண்டை ஓட்டின் உடைந்த எலும்புகளை ஸ்கேன் செய்து, தாடை உள்ளிட்ட காணாமல் போன மற்றும் சேதமடைந்த பகுதிகளை மீண்டும் உருவாக்க 3D குளோனிங் மற்றும் மறுசீரமைப்பு திட்டங்களைப் பயன்படுத்தினர். ஸ்கேன்களிலிருந்து தரவை மரபணு பகுப்பாய்வோடு இணைத்து, அருங்காட்சியகத்தில் ஒரு குழு வாழ்நாளின் சாதனைக் காட்சியை உருவாக்க ஆறு மாதங்கள் செலவிட்டது. பண்டைய காலங்களில் மோன்ஸ் கல்பே என்று அழைக்கப்படும் ஜிப்ரால்டருக்கான கிளாசிக்கல் வார்த்தையால் ஈர்க்கப்பட்ட ஆராய்ச்சியாளர்களால் இந்த மாடலுக்கு கல்பியா என்று பெயரிட்டனர்.

மனிதகுலத்தின் பாறை

ஐபீரிய தீபகற்பத்தின் தெற்கு முனையில் அமைந்துள்ள ஜிப்ரால்டரில் பண்டைய ஹோமினிட் மிச்சங்கள் இருப்பது ஒன்றும் புதிது அல்ல. ஜிப்ரால்டரின் பல அற்புதமான கண்டுபிடிப்புகள் ஆரம்பகால மனித வரலாற்றை வெளிச்சம் போட்டுள்ளன. 18 ஆம் நூற்றாண்டிலிருந்து பிரிட்டிஷ் ஜிப்ரால்டர், மத்தியதரைக் கடலின் நுழைவாயிலில் ஜிப்ரால்டர் ஜலசந்தியின் குறுக்கே மொராக்கோவின் பார்வைக்குள் உள்ளது. (ஆங்கில வம்சாவளியின் கடந்த 4,000 ஆண்டுகளின் முகங்களைக் காண்க.)

1,400 அடிக்கு கீழ், ஒரு பெரிய சுண்ணாம்புக் கல் ஒரு விரிவான குகை வலையமைப்பால் சிக்கியுள்ளது. இது பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக மனிதர்களுக்கும், அவர்களின் மனித உறவினர்களுக்கும் தங்குமிடம் அளித்துள்ளது. கல்பியாவின் அடக்கம் தீபகற்பத்தின் தெற்கு முனையில் அமைந்துள்ள யூரோப்பா பாயிண்டில் உள்ள ஒரு குகையில் கண்டுபிடிக்கப்பட்டது. யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமான கோர்ஹாமின் குகை வளாகம் இதன் அருகில் உள்ளது. இது ஒரு காலத்தில் ஜிப்ரால்டரின் நியண்டர்தால் மக்களின் தாயகமாக இருந்துள்ளது. எனவே, அவை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களுக்கு சிறப்பு ஆர்வமான பகுதியாக உள்ளன. மனிதர்களின் அழிந்துபோன வடிவமான நியண்டர்தால்கள் 32,000 ஆண்டுகளுக்கு முன்பு, இந்த குகைகளில் வசித்து வந்துள்ளனர்.

மண்டை ஓட்டின் கதை

1996 இல் கல்பியாவின் மண்டை ஓடு கண்டுபிடிக்கப்பட்டபோது, அதிலிருந்து அதிகமான தகவல்களைப் பெறுவது அவ்வளவு எளிதாக இல்லை. ஜிப்ராடரின் ஈரப்பதமான காலநிலை டி.என்.ஏவின் விரைவான சிதைவுக்கு வழிவகுத்தது. மேலும் பயனுள்ள மரபணுப் பொருள்களைப் பிரித்தெடுப்பதற்கான சாத்தியக்கூறுகள் அந்த நேரத்தில் இல்லாதிருந்தது. டி.என்.ஏ பகுப்பாய்வு ஆரம்ப கட்டத்திலேயே இருந்தது, மேலும் மண்டை ஓட்டின் சேதம் இவ்வேலையை மேலும் கடினமாக்கியது. 2019 வாக்கில் பண்டைய டி.என்.ஏ பற்றிய ஆய்வு பெரும் முன்னேற்றம் கண்டது. சயின்ஸ் இதழ் ஸ்பெயின், ஜிப்ரால்டர் மற்றும் போர்ச்சுகல் ஆகிய 271 பண்டைய மக்களின் மரபணு பகுப்பாய்வை வெளியிட்டது, இதில் 1996 மண்டை ஓடும் இருந்தது. ஹார்வர்ட் மருத்துவப் பள்ளியின் ஒருங்கிணைப்பின் கீழ், பண்டைய டி.என்.ஏவின் சாத்தியமான மாதிரிகளை ஆராய்ச்சியாளர்கள் வெற்றிகரமாக எடுக்க முடிந்தது.

RECONSTRUCTING CALPEIA’S FACE

Using the proportions of the cranium, Manuel Jaén, conservator at the Gibraltar National Museum, re-created the woman’s missing jaw. The researchers now had a 3D impression of a complete skull.

MANUEL JAÉN

கல்பியாவின் முகத்தை மறுகட்டமைத்தல்

கிரானியத்தின் விகிதாச்சாரத்தைப் பயன்படுத்தி, ஜிப்ரால்டர் தேசிய அருங்காட்சியகத்தின் பாதுகாவலரான மானுவல் ஜான், பெண்ணின் காணாமல் போன தாடையை மீண்டும் உருவாக்கினார். உருவாக்கப்பட்ட ஒரு முழுமையான மண்டை ஓட்டின் 3 டி தோற்றம்

மானுவல் ஜான்

ஆய்வு முடிவுகள்

மண்டை ஓடு 5400 BC – ல் வாழ்ந்த ஒரு பெண்ணுக்கு சொந்தமானது. ஜிப்ரால்டரின் நியண்டர்தால்கள் அழிந்துபோன பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு உருவானவள். வெளிர் நிறமுடையவள், கருமையான கூந்தலும் கண்களும் உடையவள். அவள் லாக்டோஸ் சகிப்புத்தன்மையற்றவள் (இது, அந்தக் காலத்திற்கான ஒரு பொதுவான பண்பு).

கல்பியாவின் காலத்தில் ஜிப்ரால்டரில் பயன்படுத்தப்பட்ட வகையின் ஒரு கற்கால பானை. மானுவல் ஜான்

உலகின் பல பகுதிகளில் விவசாயம் ஒரே நேரத்தில் வளர்ந்ததாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். கற்காலப் புரட்சியின் உலகளாவிய மையங்களில் அனடோலியாவும் ஒன்றாகும். அங்கிருந்து, பயிர் வளர்ப்பு மற்றும் கால்நடை வளர்ப்புக்கான நுட்பங்கள் மெதுவாக மத்திய தரைக்கடல் மற்றும் ஐரோப்பாவிற்கு மேற்கு நோக்கி பரவியது. கல்பியாவின் டி.என்.ஏவில் உள்ள அனடோலியன் கூறுகளின் அதிக விகிதம் அவளது அனடோலியன் தோற்றம் சமீபத்தியது என்று கூறுகிறது. கல்பியா அல்லது அவரது பெற்றோர் அல்லது மிக சமீபத்திய மூதாதையர்கள் அனடோலியாவிலிருந்து ஜிப்ரால்டருக்கு கடல் வழியாக பயணம் செய்திருக்கலாம்.

கல்பியாவின் மக்கள் நிலத்தில் பயணம் செய்திருந்தால், மேற்கு நோக்கி அவர்களின் பயணம் பல ஆண்டுகள் அல்லது தலைமுறைகளை எடுத்திருக்கும். அவர்களின் டி.என்.ஏ வழியில் உள்ள உள்ளூர் மக்களுடன் கலந்திருக்கும், இதனால் கல்பியாவின் விளைவாக மரபணு மிகவும் மாறுபட்டதாக இருக்கும். மத்தியதரைக்கடல் தீவான சார்டினியாவிலிருந்து தனிநபர்களின் மரபணுக்களின் பகுப்பாய்வு அனடோலியன் மரபணுக்களின் ஒத்த உயர் விகிதத்தைக் கொண்டிருப்பதில் இருந்து, அனடோலியர்கள் மத்தியதரைக் கடலுக்கு மேற்கே, மேலும் மேற்கு நோக்கி பயணித்தது என்ற கோட்பாட்டை வலுப்படுத்துகிறது.

கோர்ஹாமின் குகை வளாகத்தின் குகைகள் (யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளம்) ஒரு காலத்தில் நியண்டர்டால்களால் விரும்பப்பட்டன. பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு, சுமார் 5400 பி.சி.யில், கல்பியாவின் மக்கள் அருகிலுள்ள குகைகளை தங்கள் அடக்கங்களுக்காகப் பயன்படுத்துவார்கள். SPL / AGE FOTOSTOCK

அவர்களுடன் பயணித்த விவசாய விளைபொருள்கள் இன்னும் கண்டறியப்படவில்லை. ஜிப்ரால்டரில் இந்த காலகட்டத்தில் விவசாய நடவடிக்கைள் இருந்ததாக எந்த தொல்பொருள் சான்றுகளும் குறிக்கவில்லை. கல்பியாவும் அவளது கூட்டாளிகளும் வேட்டையாடி மீன் பிடித்திருக்கலாம். அப்படியிருந்தும், 125 மைல் தொலைவில், கல்பியா வாழ்ந்த அதே காலத்திலிருந்த கோதுமை விதைகளின் எச்சங்களை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.. அவள் அல்லது அவளுடைய அனடோலிய உறவினர்கள் விவசாயம் அறிமுகமாகி, பரவிய மாறுபட்ட காலத்தில் இருந்திருக்கிறார்கள். மனித பழக்கவழக்கங்களில் பெரும் மாற்றம் உண்டான காலகட்டத்தில் ஜிப்ரால்டரில் வாழ்ந்திருக்கிறாள். கல்பியா நமக்கு அளித்திருக்கும் செய்திகள் ஏராளம்!!!

ஆங்கிலம்: மானுவல் ஜான்

தமிழ்: லயா